ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி படிப்படியாக தென்னிந்திய அளவில் இளம் முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார் ஸ்ரீலீலா. இதனை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டிலும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் பாலிவுட்டின் இளம் ஹீரோ கார்த்திக் ஆர்யனுடன் இணைந்து 'ஆஷிக்கி 3' என்கிற படத்தில் நடித்துள்ளார் ஸ்ரீலீலா. அனுராக் பாசு இயக்கியுள்ளார். படத்தின் தலைப்பை தற்போத 'து மேரி ஜிந்தகி ஹை' என மாற்றியுள்ளனர். இந்த படம் இன்னும் வெளியாகாத நிலையில் அடுத்ததாக மீண்டும் பாலிவுட்டில் அதே ஹீரோவுடன் ஜோடியாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீலீலாவை தேடி வந்துள்ளது.
தஜமுல் இஸ்லாம் என்கிற கிக் பாக்ஸிங் வீராங்கனையின் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷன் ஆக கொண்டு இந்தப்படம் உருவாகிறது. இதில் கிக் பாக்ஸிங் வீராங்கனையாக ஸ்ரீலீலா நடிக்கிறார். அவரது கோச்சாக கார்த்திக் ஆர்யன் நடிக்கிறாராம். இதற்கு முன்னதாகவே பகவந்த் கேசரி படத்தில் நடித்தபோது இது போன்ற பயிற்சிகளை எடுத்ததுடன் ஒரு சண்டைக் காட்சியிலும் ஸ்ரீலீலா நடித்திருந்தார். அதனால் கிக் பாக்ஸர் ஆகவும் அவர் கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.
'து மேரி ஜிந்தகி ஹை' படத்தில் நடித்துவந்தபோதே ஸ்ரீலீலா, கார்த்திக் ஆர்யன் இடையே காதல் கிசுகிசுக்கள் பரவிய நிலையில், படம் வெளிவருவதற்கு முன்பாகவே மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்க கமிட் ஆகியிருப்பது, எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.




