சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் |

சினிமா நடிகர்கள் பலரும் சமூக சேவை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்களில் கல்விக்காக உதவி செய்பவர்களை அவர்களது ரசிகர்களும் பொதுமக்களும் நிச்சயம் பாராட்டுவார்கள். தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் தொடர்ந்து இப்படியான உதவிகளை செய்து வருகிறார்கள்.
புதுமணத் தம்பதியரான நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை ராஷ்மிகா ஆகியோர் அவர்களது திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 44 அரசுப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார்கள்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில், பல்மூர் மண்டலத்தில் உள்ள தும்மன்பேட் என்ற ஊர்தான் விஜய் தேவரகொண்டாவின் பூர்வீகம். அங்கு அவர்கள் புதிதாகக் கட்டிய சொந்த வீட்டில் சத்யநாராயண சுவாமி விரதம் என்ற பூஜையை நேற்று விஜய், ராஷ்மிகா மற்றும் அவர்களது குடும்பத்தினர் நடத்தினர்.
அதை முன்னிட்டு அவர்கள் ஊர் பகுதியைச் சேர்ந்த அச்சம்பேட் பகுதியைச் சேர்ந்த 44 அரசுப் பள்ளிகளில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு படிப்பிற்காக ஸ்காலர்ஷிப் தருவதாக அறிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா. இந்த கல்வித் தொகைக்காக அம்மாவட்டத்தின் கலெக்டர் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.




