மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

திருமணத்தை அவரவர் பாரம்பரிய முறைப்படி நடத்தினாலும், திருமண வரவேற்பை கொஞ்சம் 'மாடர்ன்' ஆக நடத்த வேண்டும் என்றுதான் இன்றைய இளம் தலைமுறை விரும்புகிறது. ஆண்கள் என்றால் கோட், சூட் அணிவதும், பெண்கள் என்றால் விதவிதமான டிசைன்களில் ஆடைகள் அணிவதும் திருமண வரவேற்பில் வழக்கமாக இருக்கிறது. சினிமா பிரபலங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், நேற்று நடைபெற்ற விஜய் தேவரகொன்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது திருமண நிகழ்வில் அவர்கள் அணிந்திருந்த ஆடை அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. தெலுங்கராக இருந்தாலும் விஜய் தேவரகொன்டா தமிழர்கள் அணியும் விதத்தில் வேட்டி கட்டி, வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ராஷ்மிகா சிகப்பு நிறத்தில் புடவை கட்டியிருந்தார். விஜய்யின் தம்பி ஆனந்த் தேவரகொன்டா தெலுங்கு மக்கள் அணியும் விதத்தில் வேட்டி கட்டியிருந்தாலும் விஜய் தமிழர்கள் வேட்டி கட்டும் விதத்தில் கட்டியிருந்தார்.
தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாள சினிமா பிரபலங்கள் பலரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினர். கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் நேரில் வந்து வாழ்த்தினாலும் கன்னடத் திரையுலகினர் பெரும்பாலும் வரவில்லை. ராஷ்மிகாவுக்கும், கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டிக்கும் 2017ல் திருமண நிச்சயம் நடந்து பின்னர் அதை முறித்துக் கொண்டனர். கன்னடத் திரையுலகினருக்கு திருமண வரவேற்புக்கான அழைப்பு அனுப்பப்பட்டதா அல்லது அனுப்பியும் அவர்கள் கலந்து கொள்ளவில்லையா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.