'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியான நடிகையாக மாறி மாறி நடித்து வந்த வரலட்சுமி சரத்குமார். சமீபத்தில் இயக்குனராக மாறி 'சரஸ்வதி' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சென்சார் சிக்கல் காரணமாக 'எஸ்.சரஸ்வதி' என்கிற பெயரில் கடந்த வாரம் தெலுங்கில் மட்டும் இந்த படம் வெளியானது. இந்த படத்திற்கு பிரபல கதாசிரியரான சாய் மாதவ் புர்ரா என்பவர் கதை எழுதியிருந்தார்.
தற்போது படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தை பார்த்துவிட்டு, “நான் வரலட்சுமியிடம் கொடுத்த கதை ஒன்று... படத்தில் இடம்பெற்றுள்ள கதை வேறென்றாக இருக்கிறது.. என் கதையை பலாத்காரம் செய்து விட்டார்கள். என்னுடைய கதை பழிவாங்கும் கதை அல்ல.. அதன் ஆன்மாவே வேறு. ஆனால் படத்தில் காட்டப்பட்டிருப்பது வேறு” என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய வரலட்சுமி சரத்குமார், “ஒரு சீனியர் என்கிற முறையில் கதாசிரியரை நான் மதிக்கிறேன். கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்ததால் அவரை கதை விவாதத்திற்கு அழைத்தோம். ஆனால் அவர் வேறு பல பெரிய படங்களில் பணியாற்றிக் கொண்டு பிஸியாக இருந்ததால் எங்களுக்கு ஒதுக்குவதற்கு அவரிடம் நேரமில்லை. அதற்காக இப்படி பலாத்காரம் என்கிற வார்த்தையை அவர் பயன்படுத்தியது தவறு. அப்படிப்பட்டவரிடமிருந்து இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. என்ன வார்த்தை பேசுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று காட்டமாக கூறியுள்ளார்.




