'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாகசைதன்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் விருஷகர்மா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான ஹாரர் திரில்லர் படமான 'விருபக்சா' படத்தை இயக்கிய கார்த்திக் தண்டு தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நாகசைதன்யா மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து லேசாக பின்னால் சாய்ந்த போது பிடிமானம் இல்லாமல் பின்னால் கவிழ்ந்து விழுந்தது. இதில் நாகசைதன்யாவும் கீழே உருண்டு விழுந்தார். படக்குழுவினர் பதறிப்போய் ஓடி வந்து அவரை தூக்கி விட்டனர். நாற்காலியின் கால்கள் மெல்லிய குச்சி போன்று இருந்ததுதான் நாற்காலி கவிழ காரணம் என்பது பார்க்கும்போதே தெரிகிறது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.




