ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

2026ம் வருடத்தின் முதல் வெற்றிப் படம், லாபகரமான படம் என்ற பெயரைப் பெற்றது 'தலைவர் தம்பி தலைமையில்' படம். மலையாள இயக்குனர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில், ஜீவா, பிராத்தனா நானதன், தம்பி ராமையா, இளவரசு மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி வெளியான படம் இது.
சுமார் 10 கோடி செலவில் தயாராகி 40 கோடி வரையில் வசூலாகியுள்ளதாகத் தகவல். தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற, இந்தப் படம் நாளை மறுதினம் பிப்ரவரி 12ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“கல்யாணத்துல ஆரம்பிச்சு கருமாதி வரைக்கும் பிரச்சன இழுத்து விட்ருச்சே” என்ற பதிவுடன் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெட்பிளிக்ஸ் வெளிட்டுள்ளது.
பொங்கல் படமான 'பராசக்தி' படம் கடந்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகி குறைந்த நாட்களில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியாகும் இந்த 'தலைவர் தம்பி தலைமையில்' படமும் அதிகம் பார்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஹிந்தி ஓடிடி உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளார். அம்மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்படுவதால் ஹிந்தியில் ஓடிடியில் வெளியாகவில்லை.




