ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் பந்தயங்களில் பிஸியாக பங்கேற்று வருகிறார் நடிகர் அஜித்குமார். தற்போது துபாயில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்கிறார். அவர்களை வரிசையாக நடிகர்கள், இயக்குனர்கள், நடிகைகள் என பலரும் போய் பார்த்து தங்களை 'சப்போர்ட்'டை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ரசிகர்களும் அஜித்தை காண படையெடுத்து வருவதுடன், போட்டிகளில் அஜித் அணிக்கு வரவேற்பு அளித்து ஊக்கமளிக்கின்றனர். தன்னை சந்திக்க வரும் ரசிகர்களை பயிற்சி முடிந்ததும் அவர்களிடம் புகைப்படமும் எடுத்து வருகிறார் அஜித். இந்த நிலையில், சமீபத்தில் அவருடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்கள், அங்குள்ள விலையுயர்ந்த கார்களில் மீது ஏறுவது, போட்டோ எடுப்பது, விசில் அடித்து கூச்சலிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் டென்ஷனான அஜித், ''தயவு செய்து பொறுப்பாக நடந்துகொள்ளுங்கள்.. நம்ம மானம் போகுது.. இது ஒன்னும் தியேட்டர் இல்ல.. ப்ளீஸ்'' என அறிவுரை வழங்கினார். சில நாட்களுக்கு முன், விசில் அடித்த ரசிகர்களை நோக்கி விசில் அடிக்க வேண்டாம் என சைகை மூலம் அஜித் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.




