'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் துரந்தர் படத்தின் முதல் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்து ரூ.1400 கோடி வசூலைக் குவித்தது. தற்போது துரந்தர் 2ம் பாகம் மார்ச் 19ந் தேதியன்று திரைக்கு வருகிறது.
இதற்கு முன்பு மார்ச் 12ந் தேதி இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் துரந்தர் 1 திரையரங்குகளில் வெளியாகிறது. உலகளவில் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. இந்தியாவில் மார்ச் 12 இன்று முதல் 250 திரைகளிலும், வெளிநாடுகளில் மார்ச் 13 முதல் 250 திரைகளிலும் திரையிடுகின்றனர்.
ஸ்பை-ஆக்ஷன் ஜானரில் புதிய மைல்கல்லை படைத்த இந்த திரைப்படத்தை மீண்டும் ஒருமுறை தியேட்டரில் கொண்டாடும் அற்புதமான வாய்ப்பை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இந்த முதல் பாகத்தை பார்த்த சில நாட்களிலேயே இதன் இரண்டாம் பாகத்தையும் பெரிய திரையில் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.
மேலும், துரந்தர் 2 திரைப்படத்தின் சிறப்பு பிரீமியர் காட்சிகள் வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக, மார்ச் 18 புதன்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் கனடாவில் திரையிடுகின்றனர் . இந்த பிரீமியர் காட்சிகளுக்கான டிக்கெட்டு விற்பனை நிறைவு பெற்றுள்ளது.