‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படத்தை தயாரித்துள்ள கே.வி.என் பட நிறுவனம் சென்சார் சான்றிதழ் வழங்க கோரி தாக்க செய்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளது. இதனால் ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு செல்ல உள்ளது. இந்த நடைமுறை முடிய ஒரு வாரம் ஆகலாம். பின்னர், ஜனநாயகன் ரிலீஸ் ஆக வாய்ப்பு என்கிறார்கள்.
மறு தணிக்கை உடனே நடக்குமா என்று விசாரித்தால், 'பொதுவாக சென்சார் சான்றிதழ் வழங்க, 5 சென்சார்போர்டு உறுப்பினர்கள், மண்டல அதிகாரி படம் பார்ப்பார்கள். அவர்கள் படத்தின் கதை, கட் ஆகியவற்றுக்கு ஏற்ப சான்றிதழ் வழங்குவார்கள். அதில் பிரச்னை என்றால் அடுத்த கட்டமான மறுதணிக்கை செல்வார்கள். அந்த டீமில் வேறு 10 உறுப்பினர்கள், அந்தந்த மாநிலத்தின் சென்சார்போர்டு தலைவர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். அந்த நடைமுறைக்கு ஒரு வாரம் முதல் 2 வாரம் வரை ஆகலாம்' என்கின்றனர்.
ஜனநாயகன் மறுதணிக்கையில் சென்சார் சான்றிதழை பெற்றுவிட்டால் பிப்ரவரி 20 அல்லது பிப்ரவரி 27ல் ரிலீஸ் ஆக வாய்ப்பு. மறு தணிக்கையிலும் சிக்கல், மாறுபட்ட கருத்து என்றால் உடனே சான்றிதழ் தரமாட்டார்கள். படக்குழு மீண்டும் கோர்ட் செல்ல வேண்டும். அந்த நடைமுறை முடிய இன்னும் பல காலம் ஆகும். ஆகவே, ஜனநாயகன் விஷயத்தில் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டால், த வெ க தலைவர் விஜய் நடித்த படமென்பதால் ஜனநாயகன் ரிலீசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும். ஆகவே, மறுதணிக்கையில் சென்சார்போர்டு சொல்வதை ஏற்று படத்தை கட், மியூட் செய்து இந்த மாதமே படத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று படக்குழு நினைக்கிறதாம்.