எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி | சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' பட டீசர் நாளை மறுநாள் ரிலீஸ் | பேச்சுத்துணைக்காக சம்பளம் கொடுத்து சிங்கம்புலியை மலேசியா அழைத்துச் சென்ற அஜித் | மம்முட்டிக்கு ஒரு நியாயம், சாதாரண நடிகருக்கு ஒரு நியாயமா ? : முதல்வர் மீது நடிகர் குற்றச்சாட்டு | லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் வெளியான டிசி படத்தின் புதிய போஸ்டர் | ராஷ்மிகாவின் காக்டெய்ல் 2 படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | 'ப்ரோ கிளப்' ஆக மாறும் 'ப்ரோ கோட்' ? | சிங்கப்பூர் சுற்றுலாவில் சிவகார்த்திகேயன் | நடிகர்களுக்கு, ஓடிடிக்கு கட்டுப்பாடு : சென்னை கூட்டு கூட்டத்தில் முக்கியமான முடிவு |

'வித் லவ்' படத்தில் ஹீரோ அபிஷன்ஜீவிந்த் பள்ளி காதலி அனிஷாவாக நடித்து பலரின் பாராட்டை பெற்றவர் காவ்யா அனில். படம் பார்த்தவர்கள் விமர்சன ரீதியாகவும் அவரை கொண்டாடுகிறார்கள். நீங்க யார்? இந்த பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று காவ்யாவிடம் பேசினோம்.
''நான் இப்போது வசிப்பது பெங்களூருவில். பெற்றோர்களின் பூர்வீகம் கேரளா கோழிக்கோடு. சில படங்களில் நடித்து இருந்தாலும் 'வித் லவ்' தான் பெயரை வாங்கிக்கொடுத்தது. இயக்குனர் மதன் சொல்படி நடித்தேன். அவர்தான் எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கு முக்கிய காரணம். சென்னை தியேட்டரில் படக்குழுவுடன் முதல்காட்சி பார்த்தேன். படம் முடிந்தவுடன் அனிஷா, அனிஷா என ரசிகர்கள் கத்தினார்கள். என்னை பார்த்து விசில் அடித்தார்கள். அந்த தருணத்தை வாழ்க்கையில் மறக்க மாட்டேன். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
அடுத்து தமிழகத்தின் பல்வேறு தியேட்டர்களுக்கு படக்குழுவுடன் சென்றேன். எல்லா இடங்களிலும் என் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு. பல இயக்குனர்கள், சினிமாகாரர்கள் படம் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார்கள். குறிப்பாக, இரண்டாம் பாதியில் நானும், ஹீரோவும் திருச்சியில் சந்தித்து பேசும் காட்சியை குறிப்பிட்டு சொன்னார்கள். நான் மிகவும் மதிக்கும் ரஜினி சார் படம் பார்த்துவிட்டு என் போர்ஷன் நல்லா இருப்பதாக சொன்னார். வானத்தில் மிதப்பது மாதிரி இருந்தது.
என் நண்பர்கள், குடும்பத்தினர் படம் பார்த்துவிட்டு போனில் உற்சாகப்படுத்துகிறார்கள். காதலர் தினத்துக்கு காதலர்கள், காதலிக்க இருப்பவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஹீரோயின் அனஸ்வரா ராஜன் காட்சிகளும் செம கியூட். எங்களுக்கு வித் லவ் படத்தால் தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து இருக்கிறார்கள் என்றார்.
படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, படக்குழுவினரை ரஜினிகாந்த் அழைத்து பாராட்டினார்.




