'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார் மலையாளத்தில் மரண மாஸ், ஐ எம் காதலன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் தமிழில் வெளியான 'சிறை' படத்தில் நடித்தது மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் நடிப்பிற்காக நல்ல பாராட்டையும் பெற்றார். தற்போது தமிழில் கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள 'யூத்' படத்தில் அனிஷ்மா அனில்குமார் நடித்துள்ளார்.
இதற்கான புரோமொசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனிஷ்மா அவரின் ஆரம்ப காலகட்டத்தை குறித்து கூறியதாவது, "என் சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில், ஒரு திருமண நிகழ்ச்சியில் 'நீ ஹீரோயினாக நடிக்கக் கொஞ்சம் அழகாக இருக்க வேண்டும், உனக்கு தங்கை கதாபாத்திரம் தான் அமையும்' என முகத்தில் அடித்தது போல் ஒரு அங்கிள் கூறினார். இன்னும் சிலரும் சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இதனால் நான் ஆடிஷனுக்கு போகும்போது எல்லாம் அந்த வார்த்தைகள் தான் நினைவுக்கு வரும். ஆனால், நான் நடித்த படங்கள் வெளியான பிறகு அதே நபர், 'மிக நன்றாக நடித்திருக்கிறாய்' எனப் பாராட்டினார்" என தெரிவித்துள்ளார் .