இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
விஜய்யின் தந்தையும், தமிழ் சினிமாவில் 60 படங்களுக்கு மேல் இயக்கியவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகிறார். டிராபிக் ராமசாமி படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். கடைசியாக மாநாடு படத்தில் முதல் அமைச்சராக நடித்தார். இந்த நிலையில் தற்போது குறும்படம் ஒன்றில் நடித்துள்ளார். அகிம்சை வெல்லும் என்ற இந்த குறும்படத்தை மதன் இயக்கி உள்ளார். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் தாதாவாக நடித்துள்ளார். அவரால் அண்ணனை இழந்த தம்பி ஒருவர் தனது நண்பன் ஒருவனுடன் எஸ்.ஏ.சந்திரசேகரை போட்டுத்தள்ள வருகிறார். இரண்டு இளைஞர்களின் கோபத்துக்கு முன்னால் நிற்கும் அவர் அவர்களை எப்படி சமாளித்து தப்பிக்கிறார். என்பதுதான் கதை.