'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

நடிகர் சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்த பிறகு கதைக்கு முக்கியம் வாய்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் மீனவராக நடித்து வருகிறார் சூரி. இப்படம் மீனவர்கள் இடையே நடக்கும் படகு போட்டியை மையமாக கொண்ட கதையில் தயாராகிறது. இதுவரை சூரி நடித்த படங்களை விட இந்த படத்தின் பட்ஜெட் சற்று கூடுதலாகும்.
இந்த படத்திற்கு பின் ‛‛இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் 2015ல் சென்னையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.




