சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான குண்டு கல்யாணத்தைப் பற்றி அனைவரும் அறிவோம். நெற்றியில் பெரிய பொட்டுடன் வலம் வரும் அவர் அரசியலிலும் சேர்ந்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். எம்ஜிஆரின் தீவிர ரசிகராக இருந்தார். ஆனால் அவருக்கு முன்னரே இருந்த காமெடி நடிகர் குண்டு கருப்பையா. கல்யாணத்தைப் போலவே இவரும் பெரிய உருவத்தை கொண்டிருந்ததால் இந்த பெயர் அவருக்கு வந்தது. அவர் வேறு யாருமில்லை குண்டு கல்யாணத்தின் தந்தை.
சிவாஜி நடித்த 'தங்கமலை ரகசியம்' படத்தில் கேஎஸ் தங்கமுத்துவும் இவரும் இணைந்து நடித்த 'ராஜா காது கழுத காது' காமெடி எப்போதும் கோல்டன் காமெடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ரிக்ஷாக்காரன், நான் யார் தெரியுமா, தில்லானா மோகனாம்பாள், வாழ்க்கை போன்ற பல்வேறு படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
நாடோடி, வனசுந்தரி, அந்தமான் கைதி , சர்வர் சுந்தரம், அத்தை மகள் , செங்கமலத்தீவு , அருட்பெருஞ்ஜோதி, சங்கே முழங்கு , மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, அகத்தியர், அவன் பித்தனா , ஆயிரங்காலத்துப் பயிர், பந்தபாசம் , ராமன் எத்தனை ராமனடி, குமரிக்கோட்டம் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.