75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் | பேவரைட் ஆஸ்திரேலிய நடிகையுடன் புத்தாண்டை கொண்டாடிய நதியா | நான் ஹிந்தியில் படம் இயக்கினால் இவர்தான் ஹீரோ : வினோத் | மீண்டும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதா ? நடிகர் ஜெயசூர்யா மறுப்பு | பராசக்தி படத்தை வெளியிட தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு | பத்து நாள் ராஜாவாக சதீஷ் |

விஜய் நடிப்பில் அவரது கடைசி படமாக வெளியாக இருக்கும் படம் ஜனநாயகன். தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய வினோத் முதன்முறையாக விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் பின்னணியில் இது ஒரு அரசியல் படம் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் கடந்த 2023ல் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்றும், இல்லையில்லை அந்த படத்தின் ஒரு முக்கிய பகுதியை ஜனநாயகன் படத்தில் வைப்பதற்காக மொத்த படத்தின் ரீமேக் உரிமையையும் வாங்கி விட்டார்கள் என்றும் கூட சொல்லப்பட்டு வருகிறது.
சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வினோத் கூறும்போது, “இந்த படம் ஏதோ ஒரு படத்தின் ரீமேக் என்றோ அல்லது பாதி ரீமேக் என்றோ சொல்கிறார்கள். இது முழுக்க முழுக்க தளபதி படம்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பகவந்த் கேசரி படத்தின் இயக்குனர் அனில் ரவிபுடியிடம் சமீபத்தில் தெலுங்கு செய்தியாளர்கள் இது குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளித்த அவர், “விஜய் சார் ஒரு உண்மையான ஜென்டில்மேன். அவருக்கு சினிமாவிலிருந்து விடை கொடுக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த படம் வெளியான பிறகுதான் இந்த படத்தில் நானும் ஒரு பாகமாக இருக்கிறேனா இல்லையா என்பது தெரியவரும். அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே நாம் கருதுவோம்” என்று பட்டும் படாமல் மழுப்பலாக பதில் கூறியுள்ளார் அனில் ரவிபுடி..