பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களின் ஒருவர் ராம்சரண். இவருக்கும் அப்போல்லோ குழுமத்தை சேர்ந்த உபாசனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக மனம் ஒத்த தம்பதிகளாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு கிளிங் காரா என்கிற மூன்று வயது மகளும் உண்டு..
பொதுவாக பெண்கள் தங்களது கணவர் பெயரை ஹஸ்பண்ட், மை லவ், மை ஹார்ட் என்று தானே தங்களது மொபைல் போனில் பதிந்து வைத்திருப்பார்கள். ஆனால் உபாசனாவோ வித்தியாசமாக 'ராம்சரண் 200' என்று அவரது பெயரை பதிந்து வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ராம்சரண் அத்தனை தடவை தனது மொபைல் நம்பர்களை மாற்றியுள்ளார். இது 200 வது நம்பர் என்பதால் அப்படி பதிந்து வைத்திருக்கிறேன்” என்று கூறினார்.
இத்தனை முறை ஒரு ஹீரோ மொபைல் நம்பரை மாற்றுவாரா என்ன ?




