மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' | 2025 படங்களில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | இயக்குனராக மாறிய கருணாஸ் மகன் படம் துவங்கியது : பள்ளிக்கூட பின்னணியில் கதை நடக்கிறது | விஜய் கேட்ட அந்த ஒரு கேள்வியால் நடிப்பை விட்டே ஒதுங்கினேன் : நடிகை ரோஜா | மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அறிமுக இயக்குனர் டைரக்சனில் மோகன்லால் நடிக்கும் படம் டிசம்பரில் துவக்கம் | ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் |

தெலுங்கு திரையுகின் முன்னணி நடிகரான ராம்சரண், அப்பல்லோ குழுமத்தை சேர்ந்த உபாசனா காமினேனியை கடந்த 2012ல் திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகளுக்கு பின் 2023ல் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அதற்கு கிளின் காரா என பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் உபாசனா கர்ப்பமாகி உள்ளார்.
இந்த முறை இவர்களுக்கு டபுள் ஜாக்பாட் ஆக இரட்டைக் குழந்தைகள் பிறக்க இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் உபாசனாவிற்கு கர்ப்பகாலத்தில் நடக்கும் விசேஷம் மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்குபெற நடைபெற்றது. இது குறித்த வீடியோ, புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உபாசனா, “புதிய ஆரம்பங்கள்” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




