தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சமீப வருடங்களாகவே தமிழ் சினிமாவில் மட்டுமல்ல. தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் வெளியாகும்போது முதல் நாள் வசூல், அதன்பின் மொத்த வசூல், படம் சரியாக ஓடவில்லை என்றால் அந்த படத்திற்கு எவ்வளவு நட்டம் என்கிற விவரங்கள் சோசியல் மீடியாவில் ஒவ்வொரு விதமாக வெளியாகி வருகின்றன. சில விவரங்களை தயாரிப்பாளர் தரப்பே அறிவிக்கிறது.
இந்த நிலையில் மலையாள நடிகர் நிவின்பாலி இதுகுறித்து கூறும்போது, '2எதற்காக படத்தின் லாப நட்ட கணக்கு குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அது தேவையில்லாத ஒன்று'' என்று கூறியுள்ளார்.
நிவின்பாலி நடிப்பில் அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சர்வம் மாயா' திரைப்படம் நேற்று கிறிஸ்துமஸ் ரிலீஸ் ஆக வெளியானது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ளார் நிவின்பாலி. அங்கே பத்திரிகையாளர்களிடம் அவர் உரையாடியபோது கடந்த 2025ம் வருடத்தில் வெளியான மலையாள படங்களின் லாப நட்ட கணக்கு குறித்து சமீபத்தில் வெளியான பட்டியல் பற்றி நிவின்பாலியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த நிவின்பாலி, “இப்படி லாப நட்ட கணக்குகளை வெளிப்படையாக அறிவிப்பது தேவையற்றது. இதற்கு முன்பு அது போல இருந்தது இல்லை. இப்படி அறிவித்தால் அது சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கும் பாதிப்பு. புதிதாக படம் தயாரிக்கலாம் என்று வருபவர்களையும் தயங்கி நிறுத்தி வைத்து விடும். படத்தின் லாப நட்ட கணக்குகள் படம் சம்பந்தப்பட்டவர்கள் உடனேயே மட்டும் இருப்பது தான் சினிமாவுக்கு நல்லது. எல்லா திரையுலகிலும் இது முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு மலையாளத் திரையுலகம் முன்னோடியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.