அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? | நடிகையை பிளாக்மெயில் செய்த பாய் பிரண்ட் | பிளாஷ்பேக்: பாடல் பதிவிற்குப் பின் நடனக் காட்சியை படமாக்கும் முறையை அறிமுகப்படுத்திய “அசோக்குமார்” | இளம் பெண் அமைச்சரை வாழ்த்திய நடிகை ரேவதி | முன்னாள் முதல்வரை சந்தித்த இயக்குனர் மாரி செல்வராஜ் | விஜய் முதல்வர் ஆனதால் பொறாமையா? அதிமுக-திமுக கூட்டணிக்கு முயன்றேனா? : ரஜினிகாந்த் விளக்கம் |

தமிழ் திரை உலகில் 10 வருடங்களுக்கு முன்பு வரை தனது ரசிகர்களை மச்சான் என அழைத்து குஷிப்படுத்தும் ஒரு கவர்ச்சிகரமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. அதன்பிறகு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி தற்போது அரசியல் கட்சியிலும் இணைந்து தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தேனியில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார் நமீதா.
இந்த விழாவில் செய்தியாளர்களிடம் நமீதா பேசியபோது, “மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வருவதற்கு விருப்பம் தான். அதே சமயம் 'படையப்பா' படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் போல காலம் கடந்தும் நம்மை பற்றி பேச வைக்கும் படமாக, கதாபாத்திரமாக இருக்க வேண்டும். மேலும் பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன் மற்றும் ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள்.. அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு கதாபாத்திரங்களை தேர்வு செய்ய விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.