மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காளி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகனாக ஒரு வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமானவர் ராம் சரண். ஆனால் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியான மகதீரா திரைப்படம் அவரை முன்னணி ஹீரோ அந்தஸ்திற்கு உயர்த்தியது. இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ‛ஆர்ஆர்ஆர்' திரைப்படம் அவரை உலக அளவில் வெளிச்சம் போட்டு காட்டியது. தற்போது இயக்குனர் ஷங்கர் டைரக்ஷனில் கேம் சேஞ்சர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படமும் 2025ம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னொரு பக்கம் ராம்சரண் ஒரு மிகப்பெரிய கார் பிரியரும் கூட. விலை உயர்ந்த கார்களை வாங்கி சேகரிப்பது அவரது பாக்கெட் லிஸ்டில் ஒன்று. அந்த வகையில் தற்போது 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார் ராம்சரண். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு விலை உயர்ந்த கார்கள் அவரிடம் இருக்கும் நிலையில் தற்போது ஏழாவதாக இந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் ராம்சரண் வீட்டிற்குள் புது வரவாக நுழைந்துள்ளது.