ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் கடந்த சில வருடங்களாக தமிழிலும் அடியெடுத்து வைத்து, தனுஷ், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களில் நடித்தார். அதிலும் 'அசுரன்' பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் இவர் நீண்ட நாட்களுக்கு முன்பே தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கக் கூடாதா என்பது போன்று தங்களது ஆதங்கத்தை எழுப்பினார்கள்..
அதேசமயம் 1998லேயே நடிகை மஞ்சு வாரியர் பிரபுவுக்கு ஜோடியாக தமிழில் ஒரு படத்தில் நடித்தார் என்பதும் சில காரணங்களால் அந்த படம் கைவிடப்பட்டது என்கிற ஆச்சரிய தகவலும் சமீபத்தில் மஞ்சுவாரியரின் ஒரு பேட்டி மூலம் வெளியாகி உள்ளது.
1998ல் ஜெயராம், சுரேஷ் கோபி நடிப்பில் இயக்குனர் சிபி மலயில் டைரக்ஷனில் உருவான 'சம்மர் இன் பெத்லகேம்' திரைப்படம், வரும் டிசம்பர் 12ம் தேதி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் பேசும்போது, “ஆரம்பத்தில் இந்த படம் தமிழில் உருவாவதாக தான் ஆரம்பிக்கப்பட்டது. நடிகர் பிரபுவுடன் இணைந்து எனக்கு ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அந்த படம் அத்துடன் கைவிடப்பட்டது. பின்னர் இயக்குனர் சிபி மலயில் மற்றும் கதாசிரியர் ரஞ்சித் இருவரும் இந்த படத்தில் இணைந்து மலையாளத்தில் இதை உருவாக்கினார்கள். இப்போதும் கூட இந்த கதை தமிழுக்காக தான் உருவாக்கப்பட்டதா என்கிற ஆச்சரியம் என்னிடமிருந்து விலகவில்லை” என்று கூறியுள்ளார்.




