நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

கடந்த 2014ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, வித்யூத் ஜம்வல், சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அஞ்சான்'. இந்த படம் வெளியாகுவதற்கு முன்பு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வெளியான பிறகு நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்து அது இந்த படத்தின் வெற்றியையும் பாதித்தது. தற்போது அஞ்சான் திரைப்படம் வருகின்ற நவம்பர் 28ம் தேதியன்று ரீ ரிலீஸ் ஆகிறது. இதற்காக இந்த படத்தை மீண்டும் படத்தொகுப்பு செய்து நீளத்தை குறைத்துள்ளனர்.
லிங்குசாமி கூறுகையில், "அஞ்சான் படத்தில் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுவதுமாக நீக்கியுள்ளோம். அஞ்சான் ரீ ரிலீஸ் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றால் அஞ்சான் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளார்.