பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் | மொத்தமாக 100 மில்லியன் பார்வைகள் கடந்த 'சிக்ரி சிக்ரி' | சைலண்ட் ஆக 25 நாளில் 'ஆண்பாவம் பொல்லாதது' | சினிமா டூ அரசியல் : பாலிவுட்டின் ‛ஹீ மேன்' தர்மேந்திராவின் வாழ்க்கை பயணம் | ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு |

பாலிவுட்டின் எவர்கிரீன் நடிகர் தர்மேந்திரா, 89, உடல்நலக்குறைவால் மும்பையில் அவரது இல்லத்தில் காலமானார்.
பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா. காதல், ஆக் ஷன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். வயது மூப்பு காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மும்பை தனியார் மருத்துவமனையில் சமீபத்தில் சிகிச்சை பெற்றார். குணம் அடைந்து வீடு திரும்பிய அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் இன்று மதியம் அவர் (நவ.,24) காலமானார்.
'ஆயி மிலன் கி பேலா', 'பூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா', 'ராஜா ஜானி', 'ஜுக்னு', 'யாதோன் கி பாராத்', 'தோஸ்த்', 'ஷோலே', 'பிரதிக்ஞா', 'சரஸ்', 'தரம் வீர்' போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்தவர் தர்மேந்திரா. கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவர் நடித்து இருந்தார். தர்மேந்திரா 200க்கும் மேற்பட்ட ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என்ற பன்முகத் தன்மையோடு திகழ்ந்தவர் தர்மேந்திரா. இவரது மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் தர்மேந்திரா வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.