100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடிக்கும் 'ஜனநாயகன்' படம் 2025ம் வருடம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வியாபாரத்தில் சில பல குழப்பங்கள் நடந்துள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
முதலில் இப்படத்தை ஒரே ஒரு வினியோகஸ்தருக்கே மொத்தமாக விற்றுவிட தயாரிப்பு நிறுவனம் சம்மதித்ததாம். ஆனால், அந்த வினியோகஸ்தர் பேசியபடி அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கவில்லையாம். இதனால், விஜய்யை வைத்து படம் தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆலோசனை சொல்லி வருகிறார்களாம்.
'ஜனநாயகன்' படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால், அவர்களுக்கு இங்குள்ள வியாபார நெளிவு, சுளிவுகள் தெரியவில்லையாம். எனவே, இங்குள்ள தயாரிப்பு நிறுவனம் சொல்வதை மட்டுமே செயல்படுத்தி வருகிறார்களாம். அதன்படி, படத்தை ஒவ்வொரு ஏரியா வாரியாக வெவ்வேறு வினியோகஸ்தர்களுக்கு பேசி முடித்துள்ளார்களாம்.
அந்தத் தொகை எவ்வளவு என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளதாம். ஆனால், அதற்குள் விஜய் சார்பிலான ஐ.டி விங், படத்தின் வியாபாரம் 120 கோடிக்கு நடந்தது. தமிழ் சினிமாவில் முதல் சாதனை என பில்டப் கொடுக்கச் சொன்னதாகச் சொல்கிறார்கள்.
விஜய்யின் கடைசி படம் என்பதாலும், ஏற்கெனவே வெளியான சிங்கிளுக்கு பெரிய வரவேற்பு இல்லை என்பதாலும் இனி படம் குறித்து வரும் அப்டேட்களுக்கு பெரும் பில்டப் இருக்கும் என்று கூறுகிறார்கள்.




