வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் | யூத் படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது | அதர்வா இரு வேடங்களில் நடிக்கும் ‛வலை' | 2 கோடி வசூலுக்கு 30 லட்சம் கணக்கு சொன்ன வினியோகஸ்தர் : ஆர்கே செல்வமணி அதிர்ச்சித் தகவல் | ‛ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ன மாதிரியான படம் | காவல் நிலையத்தில் நடக்கும் கதை | 'லெகசி' வெப் தொடரில் கேங்ஸ்டர் ஆக மாதவன் |

'ராஞ்சானா' படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் தனுஷ் அறிமுகமானார். பின்னர் 'அட்ராங்கி ரே, ஷமிதாப்' படங்களில் நடித்தார். தற்போது 'தேரே இஷ்க் மெயின்' படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடித்துள்ளார். படம் வருகிற 28ம் தேதி வெளியாகிறது.
படத்தில் நடித்திருப்பது பற்றி கீர்த்தி சனோன் கூறியிருப்பதாவது: நான் இந்த படத்தில் 'முக்தி' என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். இது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம். அவளது வாழ்க்கை எங்கிருந்து தொடங்குறது. அவள் என்ன ஆகிறாள், அவளின் தேர்வு என்ன? என்கிற நிறைய அடுக்குகளை கொண்ட கேரக்டர். முக்தியின் தேர்வைவும், அவளின் முடிவுகளையும் யாரும் கணிக்க முடியாது. நிறைய நியாயப்படுத்தல்கள், அவள் ஏன் அப்படி செய்கிறாள் என்பதற்கான பல விஷயங்கள், வார்த்தைகளில் சொல்லப்படுவதில்லை. அது உங்கள் பார்வையில் மொழிபெயர்க்கப்படும் வகையில் இருக்கும்.
படத்தில் முன் கிளைமாக்ஸ், கடைசி கிளைமாக்ஸ் என்ற இரண்டு அம்சங்கள் உள்ளது. கிளைமாக்ஸ் காட்சி 6 நாட்கள் வரை படமாக்கப்பட்டது. உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அந்த காட்சிகள் மிகவும் கனமாக இருந்தது.
ஒரு கட்டத்தில் நாங்கள் சோர்வடைந்து விட்டோம். படப்பிடிப்பில் இருந்த அனைவரிடமும் அந்த குறைந்த ஆற்றலை உணர முடிந்தது. காட்சியில் நடித்து முடித்து வீட்டுக்கு திரும்பியதும் அந்த காட்சிகள் திரும்ப திரும்ப என் மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. என்கிறார் கீர்த்தி சனோன்.




