பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது |

கடின உழைப்பு, துள்ளியமான திட்டமிடல், தளர்வில்லா மனம் என்ற இம்மூன்றும் ஒருங்கே அமையப் பெற்று, இந்தியத் திரையுலகையே தன்பால் ஈர்க்கச் செய்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம் மற்றும் சிங்களம் என அனைத்து மொழிகளிலும் தொடர் வெற்றித் திரைப்படங்களைத் தந்து, கலையுலகில் வாகைச்சூடிய தனிப்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏ வி எம்மின் நிறுவனரான ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் தயாரிப்பிலும், மேற்பார்வையிலும் வெளிவந்த ஒரு கன்னட மொழி திரைப்படம்தான் “அரிச்சந்திரா”.
“கண்ணகி” என்ற வெற்றித் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனங்களை வெகுவாக வென்றிருந்த வெற்றிக் கூட்டணியான பி யு சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடிக்க, இயக்குநர் நாகபூஷணத்தின் இயக்கத்தில் தமிழில் தயாராகிக் கொண்டிருந்தது ஒரு “அரிச்சந்திரா”. அப்போது யுத்த காலம் என்பதால், பலர் நகரை விட்டு வெளியேறியிருந்தனர். ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் 'பிரகதி ஸ்டூடியோ'விலும் பணியாளர்கள் பலர் அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்தனர். ஒலிப்பதிவாளர் சீனிவாச ராகவன், வசனகர்த்தா ஏ டி கிருஷ்ணசாமி மற்றும் சில பணியாளர்கள் மட்டும் 'பிரகதி ஸ்டூடியோ'வில் பரபரப்பாக பணி செய்து வந்தனர்.
ஆர் நாகேந்திர ராவ் இயக்க, ஏ வி மெய்யப்ப செட்டியார் அவர்களின் மேற்பார்வையில் 'பிரகதி ஸ்டூடியோ'வில் தயாரிக்கப்பட்டு, மிகப் பெரிய வெற்றி பெற்ற கன்னட மொழித் திரைப்படமான 'அரிச்சந்திரா' திரைப்படத்தை எந்த ஒரு ஆர்ப்பாட்டமுமின்றி தமிழில் டப் செய்யும் பணி நடந்து கொண்டிருந்தது. தமிழ் வசனங்களை ஏ டி கிருஷ்ணசாமி எழுதியிருந்தார். இரவு பகல் பாராமல் பணிபுரிந்து, பி யு சின்னப்பா நடித்த 'அரிச்சந்திரா' வெளிவரும் முன்பே இந்த கன்னட 'அரிச்சந்திரா'வை தமிழாக்கி வெளியிட்டார் ஏ வி மெய்யப்ப செட்டியார்.
பி யு சின்னப்பா மற்றும் பி கண்ணாம்பா நடிப்பில் வெளிவந்த நேரடி தமிழ் திரைப்படமான 'அரிச்சந்திரா'வை விட, இயக்குநர் ஆர் நாகேந்திரராவ் இயக்கத்தில், சுப்பையா நாயுடு, லக்ஷ்மி பாய், கமலா பாய் ஆகியோர் நடித்து, தமிழில் டப் செய்யப்பட்ட கன்னட மொழி 'அரிச்சந்திரா' வசூலில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த வியாபாரப் போட்டியில் ஏ வி மெய்யப்ப செட்டியார் வெற்றி பெற்றார். மேலும் பிற மொழியிலிருந்து தமிழில் டப் செய்யப்பட்ட முதல் திரைப்படம் என்ற பெருமையையும் உரித்தாக்கியது இந்த ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா'.




