'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் | 'கர' படத்தில் ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் கேரக்டர் போஸ்டர் வெளியீடு |

'ராஜபார்வை' படத்தின் கமர்ஷியல் தோல்வியால் துவண்டிருந்த கமல், பின்னர் ஜெயித்தே காட்ட வேண்டும் என்ற உறுதியோடு ஹாலிவுட் டைப்பில் ஒரு படம் பண்ண வேண்டும் என்கிற உறுதியெடுத்து ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பாணியில் உருவாக்கியதுதான் அன்றைய 'விக்ரம்'. டிம்பிள் கபாடியா, அம்ஜத்கான் ஆகியோரை நடிக்க வைத்து அப்போதே பான் இந்தியா படமாக தந்தார்.
தமிழ் சினிமா வரலாற்றில், கோடிகளில் உருவான முதல் படம் . 'அக்னிபுத்திரன்' என்ற ஏவுகணையைக் கடத்தி விடும் கும்பலில் இருந்து, ஹீரோ எப்படி நாட்டைக் காக்கிறார் என்ற, 'ஜேம்ஸ்பாண்ட்' கதை தான், விக்ரம்.
இப்படத்திற்காக, 'சலாமியா' என்ற கற்பனை நாடு உதயமானது. ராஜஸ்தானில் படமாக்கப்பட்டு, சலாமியா என, பெயர் சூட்டப்பட்டது. அங்குள்ள, எலி கோவிலில் எடுக்கப்பட்ட காட்சிகள், ரசிகர்களை ஆச்சரியப்பட செய்தன.
இளையராஜாவின் இசையில், 'விக்ரம், வனிதாமணி, சிப்பிக்குள் ஒரு முத்து, என் ஜோடி மஞ்சக்குருவி, மீண்டும் மீண்டும் வா...' போன்ற பாடல்கள், பெரும் வெற்றி பெற்றன.
இந்த படத்தின் மீதிருந்து பெரிய நம்பிக்கை காரணமாக படத்தின் முதல் காட்சி வசூலை யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் நல பிரிவுக்கு வழங்குவதாக அறிவித்தார் கமல். அதன்படியே செய்தார். இதற்கென்று தனியாக விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடத்தி அதில் வந்த வசூலையும் யுனிசெப் அமைப்புக்கு வழங்கினார்.




