மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி |

நடிகரும், தவெக., தலைவருமான விஜய் அரசியலில் பயணிக்கிறார். சமீபத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். இந்த நிகழ்வு நடந்த ஒரு சில நாட்களில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா உடன் பங்கேற்றது விமர்சனத்திற்கு உள்ளானது.
இதுபற்றி அப்போது நிகழ்ச்சி ஒன்றில் சினிமா நண்பர்களுடன் யதார்த்தமாக பேசிய சமுத்திரகனி, “இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்'' என விமர்சித்து இருந்தார்.
இது வைரலான நிலையில் இதுபற்றி சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறுகையில், ‛‛எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேச தெரியாது. எனக்கு வீடியோ எடுப்பது தெரியும், அதற்காக நான் பேசாமல் இருக்க முடியாது. ஒரு அக்கறையும், அதனால் ஏற்பட்ட வலியும் தான் அப்படி பேசியதற்கு காரணம், அதற்காக நான் வருத்தப்படவில்லை. அது ஒன்றும் குற்றமில்லை'' என்றார்.