'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' | சூர்யாவுக்கு வில்லன் ஆன ஆர்.ஜே.பாலாஜி : கருப்பு டிரைலருக்கு வரவேற்பு | தகராறு : ஜி.பி.முத்து மீது தாக்குதல் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த ராஜசேகர் | பிளாஷ்பேக் : திரைக்கதை சொதப்பலால் தோல்வி அடைந்த சிவாஜி படம் | சிறப்பு காட்சி பார்த்துவிட்டு புகழ்வதை நம்பாதீங்க : தெளிவான சினிமா ரசிகர்கள் | நுாறுசாமி கதை உருவானது எப்படி? | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் |

தெலுங்கு திரையுலகத்தினருக்காக தெலங்கானா அரசு வழங்கி வரும் கட்டார் சினிமா விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் 2025ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான விருதுகளுடன் இதர சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.
நடிகர் கமல்ஹாசனுக்கு பைடி ஜெய்ராஜ் சினிமா விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட கமல்ஹாசன், “இனி கோலிவுட், டோலிவுட், பாலிவுட், சாண்டல்வுட் என்பதெல்லாம் கிடையாது. ஒரே ஒரு சினிமாதான், அது இந்திய சினிமா” என்று பேசினார்.

சற்று முன் எக்ஸ் தளத்தில் விருது பெற்ற புகைப்படங்களைப் பகிர்ந்து, “தெலங்கானா கட்டார் விருதுகளை மீண்டும் உயிர்ப்பித்தமைக்காக முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன் பைடி ஜெய்ராஜ் சினிமா விருதை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

இந்த அமைப்பை நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தன் மூலம் வெறும் ஒரு கவுரவத்தை மட்டுமல்ல, கலையாற்றல் மிக்க துணிச்சலையும், கலாச்சார நினைவுகளையும், திரைப்படத் துறையில் மக்களின் குரலைலையும் அங்கீகரிப்பதில் முக்கியப் பங்கை நீங்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள். விருது பெற்ற சக கலைஞர்கள் அனைவருக்கும், இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்த குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்வில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.