தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
நடிகர் கமல்ஹாசன், 'கல்கி 2898 ஏடி' படத்தின் அறிவிப்புகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார். அந்த விழா முடிந்த பின்னும் இந்தியன் 2 பட வேலைகள் தொடர்பாக அமெரிக்காவிலேயே தங்கியுள்ளார். அவருக்கு மேக்கப் கலைஞராகப் பணிபுரிந்த மைக்கேல் வெஸ்ட்மோரை சந்தித்துப் பேசினார். அடுத்து ஆஸ்கர் மியூசியத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுடன் சென்றுள்ளார்.
இருவரும் அங்கு 'த காட் பாதர்' படத்தைப் பார்த்து ரசித்தனர். மேலும் மியூசியத்தில் இடம் பெற்றுள்ள தகவல்களையும் ரசித்துப் பார்த்தனர். அந்த புகைப்படங்களை ஏஆர் ரஹ்மான் பகிர்ந்து “ஒரு கோட் (Goat) மற்றுமொரு கோட்-ஐ பார்க்கிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Goat என்பதற்கு Greatest of all time, அதாவது 'எல்லா காலத்திலும் சிறந்தவர்கள்,” என அர்த்தம்.
அமெரிக்காவிலிருந்து வந்த பின் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அவரது 233வது படத்தில் நடிக்க உள்ளார்.