ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி | 73வது பிறந்தநாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவா! | விடாமுயற்சி படத்தின் சிறு பிஜிஎம் வைரல் | சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சூர்யா - சிவா வழிபாடு | விவாகரத்து வழக்கு ; தனுஷ் - ஐஸ்வர்யா நேரில் ஆஜர் : பிரிவதில் இருவரும் உறுதி | விமர்சனங்கள், தியேட்டர் கருத்துக்கள்…தடுக்க முடியுமா? | ஏ.ஆர்.ரஹ்மான் குழுவிலிருந்த பெண் 'கிடாரிஸ்ட்' விவாகரத்து |
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இந்தாண்டு முழுக்க கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ் திரையுலகம் சார்பில் அவருக்கு விழா எடுத்து கொண்டாடப்படும் என சமீபத்தில் நடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. அதன் ஒருபகுதியாக திரையுலகினருக்கு அழைப்பு விடுக்கும் பணி நடக்கிறது. இன்று(நவ., 17) நடிகர் ரஜினிகாந்த்திற்கு நேரில் சென்று திரையுலகினர் அழைப்பு விடுத்தனர். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் விழா குழு சார்பில் ரஜினியை நேரில் சென்று அழைத்தனர். ரஜினியும் நிச்சயம் வந்து கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார்.
அதேப்போல் நடிகர் கமல்ஹாசனுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முரளி ராமசாமி, ஆர் கே செல்வமணி, நாசர், பூச்சி முருகன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று அழைப்பு விடுத்தனர்.
படப்பிடிப்பு ரத்து
தமிழ் திரையுலகம் சார்பில் டிசம்பர் 24ம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த விழா நடைபெறுகிறது. விழாவிற்காக டிச 23, 24 ஆகிய தேதிகளில் தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.