ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

ரஜினிகாந்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஸ்ரீகாந்த். சிவாஜி ராவ் என்ற பெயர் பாலச்சந்தருக்கு பிடிக்கவில்லை. காரணம் ஏற்கனவே ஒரு சிவாஜி இருப்பதால் இன்னொரு சிவாஜி வேண்டாம் என்று கருதி அவருக்கும் காந்த் என்று முடிகிற ஒரு பெயரை தேடும் போது, அவரது வழக்கறிஞரான ரஜினிகாந்தின் பெயரையே அவருக்கு வைத்தார்.
இந்த இரண்டு 'காந்த்'ளும் அப்பொழுது வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ஒரு போட்டியும் இருந்தது. சில படங்களில் இருவரும் சேர்ந்து நடித்தார்கள். அதில் முக்கியமான படம் 'சதுரங்கம்'. துரை இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியும் ஸ்ரீகாந்தும் நேர் எதிரான கேரக்டர்களைக் கொண்ட சகோதரர்களாக நடித்தனர் நடித்திருந்தனர்.
படத்தின் டைட்டிலில் யார் பெயரை முதலில் போடுவது என்ற பிரச்னை உருவானது. 'நான் சீனியர் நடிகர் என் பேரைத்தான் முதலில் போட வேண்டும்' என்று ஸ்ரீகாந்த் சொல்ல, 'எனக்குத்தான் ரசிகர்கள் அதிகம், அதனால் என் பெயரை தான் முதலில் போட வேண்டும்' என்று ரஜினிகாந்த் சொல்ல, என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் இயக்குனர் துரை.


இறுதியில் இருவரையும் திருப்திப்படுத்தும் வகையில் ரஜினிகாந்த் என்று டைட்டில் போடும்போது, ஸ்ரீகாந்த் புகைப்படம் இருக்கும். ஸ்ரீகாந்த் என்று டைட்டில் போடும்போது ரஜினிகாந்த் புகைப்படம் இருக்கும். இது இருவருக்குமே திருப்தியை தந்தது.
'பைரவி' படம் வெளிவந்த போதும் இதே பிரச்சனை உருவானது. இருவர் பேரையும் ஒரே கார்டில் போட்டு சமாளித்தார் தயாரிப்பாளர். ஆனால் படத்துக்கு வெளியே தயாரிப்பாளர் தாணு 'சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்து ஒரே படத்தில் ரஜினியை உயர்த்தி வைத்து விட்டார்.




