ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் | ‛ஜனநாயகன்' அப்டேட் என்ன...? எப்பதான் படம் ரிலீஸ்? | இன்னும் ஆறு நாட்களில் 'பெத்தி' படப்பிடிப்பு முடியும் ; இயக்குனர் உறுதி |

'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் தம்பியாக நடித்த குமரன் தங்கராஜன் 'குமார சம்பவம்' படத்தில் ஹீரோவாக நடித்தார். சமூக ஆர்வலர் ஒருவர் கொலை பின்னணியில் அந்த படம் உருவானது. ஒரு எழுத்தாளர் கொலை பின்னணியில் உருவான படம் 'இறுதி பக்கம்'. இதை இயக்கியவர் மனோ வெ கண்ணதாசன். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு திரில்லர் படம் கொடுக்க இருக்கிறார்கள். வழக்கமான பாணியில் அல்லாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக பெயரிடப்படாத இந்த படம் வர உள்ளளது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் 'குமார சம்பவம்' புகழ் குமரன் தங்கராஜன் ஜோடியாக ஸ்மேகா நடிக்கிறார். திருச்சி மற்றும் பெரம்பலூரில் கதை நடப்பதால் அங்கேயே படப்பிடிப்பு நடக்க உள்ளது. லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்ய, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள், தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.