அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

திரைப்பட வரலாற்றில் சில நிகழ்வுகள் புரிவதில்லை. அப்படியான ஒன்றுதான் ‛இது நம்ம ஆளு' திரைப்படம். இயக்குனராகவும், நடிகராகவும் புகழின் உச்சியில் இருந்த கே. பாக்யராஜ் நடித்த படம். படத்திற்கான கதையும் வசனத்தையும் அவரே எழுதியிருந்தார். ஆனால் இந்தப் படத்தை இயக்கியவர் எழுத்தாளர் பாலகுமாரன்.
கே பாலச்சந்தர் மற்றும் மணிரத்தினம் படங்களில் வசனம், திரைக்கதை, எழுதி வந்த எழுத்தாளர் பாலகுமாரன் முதன் முதலாக இயக்கிய படம். ஷோபனா, சோமயாஜுலு, மனோரமா குமரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் தனது வளர்ச்சிக்காக உயர்தர சமூகத்து இளைஞனாக வேடமிட்டு, அந்த சமூகத்து பெண்ணை திருமணம் செய்வதாக உருவான கதை.
நினைத்திருந்தால் பாக்கியராஜ் இந்த படத்தை இயக்கியிருக்க முடியும். படத்தை பாலகுமாரன் இயக்கியதற்கு இந்த வில்லங்கமான ஒரு கதையும் அடிப்படை காரணமாகும். பாலகுமாரனுக்கு பின்னால் நின்று பாக்யராஜ் கொடுத்த படம் என்றும் இதனை குறிப்பிடலாம்.
ஆனால் இது குறித்து இருவருமே எங்கேயும் வெளிப்படையாக பேசியதில்லை. என்றாலும் படம் பெரிய வெற்றி பெற்றது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. பெரிய சமூக மாற்றத்திற்கான படம் என்று அப்போது விமர்சனகளால் பாராட்டப்பட்டது.