மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

ஹிந்தியில் நடித்த 'ஓ ரோமியோ' படத்தை அடுத்து தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'புருஷன்' படத்தில் நடித்து வரும் தமன்னா, ஹிந்தி, தெலுங்கில் மேலும் பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் 'தட் இஸ் மகாலட்சுமி' என்ற படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறார் தமன்னா. பிரசாந்த் வர்மா இயக்கும் இப்படம் ஹிந்தியில் 2014ம் ஆண்டு வெளியான 'குயின்' என்ற படத்தை தழுவி உருவாகிறது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ரவிதேஜா நடித்து வரும் 'இருமுடி' என்ற படத்திலும் இணைந்திருக்கிறார் தமன்னா. இந்த படத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். ஐயப்ப சுவாமி பக்தராக கருப்பு உடை அணிந்து எளிய மனிதராக ரவிதேஜா நடிக்கும் இந்த படத்தில் தற்போது கதையின் ஒரு முக்கிய கீ ரோலில் நடிப்பதற்கு தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார்கள். ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமன்னா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.