வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

ஜெமினி கணேசன் நடித்த மிக முக்கியமான படங்களில் ஒன்று 'மிஸ்ஸியம்மா'. எல்.வி. பிரசாத் இயக்கினார். இந்தப் படம் பெங்காலி எழுத்தாளர் ரவீந்திரநாத் மைத்ராவின் 'மன்மோயி உமன் ஸ்கூல்' என்ற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தெலுங்கில் 'மிஸ்ஸம்மா' என்ற பெயரில் படமாக்கப்பட்டது.
பானுமதி முதலில் நாயகியாக நடிப்பதாய் இருந்தது தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அவர் விலகிக் கொள்ள அதன் பிறகு சாவித்திரி நடித்தார். ஜெமினிகணேசன் நாயகனாக நடித்தார். இவர்கள் தவிர கே.ஏ. தங்கவேலு , ஜமுனா, எஸ்.வி. ரங்காராவ், ருஷ்யேந்திரமணி, கே. சாரங்கபாணி, எம்.என். நம்பியார் ஆகியோரும் நடித்தனர்.
இரண்டு மொழிகளிலும் படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் 1957ம் ஆண்டு ஹிந்தியில் 'மிஸ். மேரி' என்ற பெயரில் ரீமேக் செய்தது. ஜெமினி தமிழில் நடித்த கேரக்டரில் ஹிந்தியிலும் நடித்தார். எல் வி பிரசாத் ஹிந்தியிலும் இயக்க, சாவித்திரி நடித்த டைட்டில் கேரக்டரில் மீனாகுமாரி நடிக்க, இவர் தவிர கிஷோர் குமார், ஜமுனா, ரன்வீர் ஆகியோரும் நடித்தார்கள். இங்கும் படம் பெரிய வெற்றி பெற்றது.