Birthday
12 Dec 1950 (Age 68)
1950-வது வருடம் டிசம்பர் 12-ந்தேதி பிறந்தவர் ரஜினி. பெங்களூரில் பஸ் கண்டக்டராக இருந்த ரஜினி நடிப்பு தாகத்துடன் சென்னை வந்து சினிமா வாய்ப்புக்காக அலைந்தபோது, 1975ம் ஆண்டு தான் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினியை வில்லனாக அறிமுகம் செய்தார் கே.பாலசந்தர். அதோடு ஏற்கனவே சிவாஜிகணேசன் என்றொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருந்ததால், சிவாஜிராவ் என்ற பெயர் அவருக்கு சரிவராது என்று ரஜினிகாந்த் என்றும் மாற்றி வைத்தார் பாலசந்தர்.
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிகாந்தாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், முதல் படத்திலேயே ரசிகர்களை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்ததால், அவரது நடிப்புக்கு வரவேற்பு ஏற்பட்டது. பின்னர் சில படங்களில் வில்லனாக நடித்த ரஜினி, அதையடுத்து ஹீரோவாக அவதரித்தார். சில படங்களிலேயே அவருக்கென்று ஒரு தனி பாணி உருவாகியதால் சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் பெற்றார். அப்படி சினிமாவில் நடிக்க வந்த ரஜினி இன்றுவரை முடிசூடா மன்னராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த மன்னனுக்கு இன்று(டிச., 12ம் தேதி) 64வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவரது லிங்கா படமும் வெளிவர இருக்கிறது. அதனால் இந்தாண்டு ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.
தினமலர் சார்பாக ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!