பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஷங்கர் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் உருவான 'இந்தியன் 2' படம் கடந்த வருடம் வெளிவந்து படுதோல்வியை சந்தித்தது. அதன்பின் ஷங்கர் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த 'கேம் சேஞ்ஜர்' தெலுங்குப் படமும், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'தக் லைப்' படமும் வெளிவந்து அவையும் பெரிய தோல்வியைத் தழுவியது. இதனால், 'இந்தியன் 3' படம் மீண்டும் உருவாவதில் சிக்கல் என நாம் கூட ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்ற புத்தக விழா ஒன்றில் கலந்து கொண்ட ஷங்கர், ரஜினிகாந்த் மனம் விட்டுப் பேசியுள்ளனர். அப்போது 'இந்தியன் 3' குறித்த தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார் ஷங்கர். அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் களத்தில் இறங்கி தயாரிப்பாளர் சுபாஷ்கரன், நடிகர் கமல்ஹாசன் ஆகியோருடன் பேசினாராம். அதன்பின் 'இந்தியன் 3' படத்திற்கான எஞ்சியுள்ள சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு எட்டப்பட்டதாம். விரைவில் அது நடக்கலாம் என்கிறார்கள். திட்டமிட்டபடி அப்படி நடந்து முடிந்தால் இந்த ஆண்டிலேயே 'இந்தியன் 3' வெளியாகும் சூழல் வரலாம்.
லைகா நிறுவனம் அடுத்ததாக பத்து படங்கள் வரையில் தயாரிக்கும் முடிவில் உள்ளதாகவும் சொல்கிறார். அவை என்னென்ன என்பதற்கான அறிவிப்புகளும் விரைவில் வர உள்ளது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.