ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. அடுத்த மாதம் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார் ரஜினிகாந்த். அந்த படத்துக்கான நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது. லேட்டஸ்ட் தகவல் படி, அதில் ஷோபனா நடிக்கப்போகிறாராம். ரஜினியுடன் 'தளபதி, சிவா' படங்களில் நடித்தவர் ஷோபனா. 'கோச்சடையான்' படத்தில் கூட நடித்தார். ஆனால், அது வழக்கமான சினிமா அல்ல என்பதால், தளபதி படத்துக்குபின் சேருகிறார்.
கூட்டி கழித்து பார்த்தால் 35 ஆண்டுகளுக்குபின் இந்த கூட்டணி ஜோடி சேருகிறது.
ஜெயிலர் 2 படத்தில் ரஜினி ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார். வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியர் நடித்தார். கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி இல்லை. அண்ணாத்த, தர்பார் படங்களில் நயன்தாராவும், பேட்ட படத்தில் சிம்ரன், திரிஷாவும், காலாவின் ஈஸ்வரி ராவ், கபாலியின் ராதிகா ஆப்தே நடித்ததும் குறிப்பிடத்தக்கது.




