கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்த 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். படத்தைப் பார்த்த பல சினிமா பிரபலங்கள் படத்தையும், இயக்குனர் அபிஷனையும் பாராட்டினர். ரஜினிகாந்த், ராஜமவுலி, நானி, சுதீப் என பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
நடிகர் நானியை நேரில் சந்தித்ததை நேற்று பதிவு செய்த அபிஷன், தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்தது குறித்து பதிவு செய்துள்ளார். “நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த காரணத்தை இன்று நிறைவாக உணர்கிறேன். அவர் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிபிடித்த விதம், என் உடம்பெல்லாம் புல்லரித்துப் போனது. நான் சிறு வயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்தது போலவும், ஆனால், அது எனக்குத் தேவையான நேரத்தில் சரியாக வந்துவிட்டது போலவும் அவரது புன்னகை இருந்தது. என்ன ஒரு மனிதர், எளிமையின் சின்னம். இந்தத் தருணத்தை விட பெரிய உந்துதலையோ அல்லது ஆசீர்வாதத்தையோ என்னால் கேட்க முடியாது. என்றென்றும் உங்களை நேசிக்கிறேன், தலைவா ரஜினிகாந்த் சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.