என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

நடிகர் பார்த்திபன், நடிகை சீதா இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணமான 11 வருடங்களில் பிரிந்துவிட்டார்கள். அவர்களுக்கு கீர்த்தனா, அபினயா என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ராதாகிருஷ்ணன் என்ற மகனை தத்தெடுத்து வளர்த்தார்கள். கீர்த்தனா, ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடனும், அபினயா சீதாவுடனும் இருந்து வந்தார்கள். மகள்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
ராதாகிருஷ்ணன் விரைவில் படம் இயக்க உள்ளதாக தற்போது பார்த்திபன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
“ராக்கி பார்த்திபன் ! என் மகன், என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்தத் திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார். விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன். அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன்.
என்னைப் போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!”. இவ்வாறு பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.
பலரும் பார்த்திபனுக்கும், ராக்கிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.