ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல், 98, வயது மூப்பால் வரும் உடல்நலப் பிரச்னையால் மும்பையில் இன்று(நவ., 14) காலமானார். இந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளில் சுமார் 90 படங்கள் வரை இவர் நடித்துள்ளார்.
1927ல் பிறந்த இவர் 1946ல் ‛நீச்சா நகர்' எனும் படம் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். முதல்படமே இவருக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது. கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று இப்படம் விருது வென்றது. தொடர்ந்து 'தோ பாய், ஷாஹீத், நதியா கே பார், படே சர்க்கார், உப்கார், 'பூர்வ அவுர் பஸ்சிம், சந்தோஷ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1946, 1950, 1960களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர் கருப்பு, வெள்ளை சினிமா காலமான 1946 முதல் டிஜிட்டல் யுகமான 2022 வரை படங்களில் நடித்துள்ளார்.
அன்றைய சூப்பர் ஸ்டார் நடிகர்களாக திகழ்ந்த அசோக் குமார், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், திலீப் குமார், தர்மேந்திரா போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் இன்றைய டாப் ஸ்டார் நடிகர்களான ஷாரூக்கான், அமீர்கான், ஷாகித் கபூர் ஆகியோரின் படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2022ல் அமீர்கான், கரீனா கபூர் நடிப்பில் வெளியான லால் சிங் சத்தா படத்தில் நடித்தார்.
காமினி கவுசலின் மறைவுக்கு நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.