கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகி வருகிறது பள்ளிச்சட்டம்பி. நடிகை கயாடு லோகர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பிரித்விராஜ் நடிப்பில் போலி என்கவுண்டரை மையப்படுத்தி ஜன கன மன என்கிற படத்தை இயக்கியவர். இதில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக நடிகர் பிரித்விராஜையும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இணைத்துள்ளார் டிஜோ ஜோஸ் ஆண்டனி.
ஜன கன மன பட நட்புக்காக பிரித்விராஜ் இந்த கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நடிகர் டொவினோ தாமஸ் வளர்ந்து வரும் நடிகராக இருந்த காலகட்டத்தில் பிரித்விராஜ் உடன் அவர் இணைந்து நடித்த செவன்த் டே, என்னு நிண்டே மொய்தீன் மற்றும் ஊழம் உள்ளிட்ட படங்கள் அவருக்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தன. பிரித்விராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டு பாகங்களிலும் டொவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த நட்பின் அடிப்படையிலும் பிரித்விராஜ் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார் பிரித்விராஜ்.




