மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

நடிகை ருக்மணி வசந்த் கன்னட சினிமாவின் மூலம் அறிமுகமாகி தமிழில் ஏஸ், மதராஸி ஆகிய படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன் ரிஷப் ஷெட்டி நடிப்பு, இயக்கத்தில் வெளியான ‛காந்தாரா சாப்டர் 1' படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் ருக்மணி வசந்த் நடித்து அசத்தினார். இந்த படத்திற்கு பிறகு பான் இந்தியா அளவில் கவனிக்கப்படும் ஹீரோயின் ஆக அவர் மாறியுள்ளார். தற்போது டாக்சிக், என்டிஆர் படம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கவுள்ள அவரின் 17வது படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். தற்போது அவர் நடித்து வரும் மூன்று படங்களும் பான் இந்தியா அளவில் உருவாகின்றன. இதன்மூலம் அவரும் பான் இந்தியா அளவில் இன்னும் பிரபலமாக வாய்ப்புள்ளது.