பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தினேஷ் தினா இயக்கத்தில் அமெரிக்கா வாழ் தமிழ் பெண் சிந்தியா என்பவர் தயாரித்து, நடிக்கும் படம் அனலி. இந்த படம் இந்தவாரம் ஜனவரி 2ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படம் குறித்து சென்னையில் பேசிய சிந்தியா, ‛‛இது நான் தயாரித்து நடிக்கும் மூன்றாவது படம். மூன்று படங்களிலும் நிறைய அனுபவம் கிடைத்தது. நானே சொந்தமாக சம்பாதித்து இந்த படங்களில் முதலீடு செய்கிறேன். எங்கே விட்டாலும் அங்கே தான் தேட வேண்டும் என்று சினிமாத் துறைகளை மீண்டும் படம் தயாரிக்கிறேன். இதற்கு முன்பு தினசரி என்ற படத்தில் நடித்தேன், அதற்கு இளையராஜா இசை அமைத்தார். அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அனலியில் ஆக் ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன், மற்ற பெரிய ஹீரோக்கள் தயங்கும் சண்டை காட்சிகளில் துணிச்சலாக நடித்தேன்.
விஜயின் ஜனநாயகன், சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுடன் அனலி மோதுவது மகிழ்ச்சி நடிகர் விஜய் வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எனக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். 2026 தேர்தல் வருகிறது அதில் விஜய் வெற்றி பெற மாட்டார். நவம்பருக்கு பின் மீண்டும் நடிக்க வருவார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பார் என நம்புகிறேன்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு படம் தயாரிக்கவும் ஆசை. பெண்ணாக இருப்பதால் நிறைய அவமானங்கள் டிரோல்களை சந்திக்கிறேன். ஆனாலும் அதை மீறி ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. எனது முன்னோர்கள் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் வளர்ந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் படங்கள் பார்த்து, தமிழ் படித்து தமிழ் சினிமா தயாரித்து நான் நடிக்கிறேன். அனலி படத்தில் இயக்குனர் பி வாசு மகன் சக்தி வாசு வில்லனாக நடித்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.