10 ஆயிரம் கண்டெயினர் யார்டில் படமாக்கப்பட்ட 'அனலி' | 'மகாசேனா'வில் அம்மாவாக நடிக்கும் சிருஷ்டி டாங்கே | சிவகார்த்திகேயனை தொடர்ந்து சிம்புவுக்கு கதை தயார் செய்த ஏ.ஆர்.முருகதாஸ்! | பிளாஷ்பேக்: 'நாட்டியப் பேரொளி' பத்மினியை நாடறியும் நாயகியாக்கிய “மணமகள்” | கிரிக்கெட் வீரருடன் டேட்டிங் செய்யும் மிருணாள் தாக்கூர்! | 'அட்டகாசம், அஞ்சான்' ரீ ரிலீஸ்: வசூல் நிலவரம் என்ன? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் சமுத்திரக்கனி! | சுந்தர். சி, விஷால் படத்தின் புதிய அப்டேட்! | தனுஷுக்கு வசூலில் புதிய மைல்கல் ஆக அமையும் 'தேரே இஸ்க் மே' | கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு திரைக்கு வரும் 'கொம்பு சீவி' |

சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள படம் "அனலி". படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெங்கட் பிரபு வெளியிட்டார். படம் குறித்து இயக்குனர் தினேஷ் தீனா கூறியது, "படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது.
காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன். அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால் சேட்டா. ஜான்சி தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி எப்படி இதை முடிவுக்கு கொண்டு வருகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் இந்த அனலி. இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படம் பிடித்துள்ளோம். அது எந்த யார்டு என்பது விரைவில் அறிவிக்கப்படும். சைந்தவி பாடிய பாடலும் விரைவில் வெளியாக உள்ளது.