ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

நட்சத்திரங்கள் பலரும் விளம்பர படங்களில் நடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதே சமயம் அவர்கள் ஆன்லைன் ரம்மி, பான் மசாலா மற்றும் மதுபான வகை விளம்பரங்களில் நடிப்பதற்கு பொதுமக்களிடம் மட்டுமல்ல, அவர்களது ரசிகர்களிடமிருந்து கூட எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் சல்மான் கான் நடித்த பான் மசாலா விளம்பரம் ஒன்று அவருக்கு கடும் எதிர்ப்பை கொண்டு வந்துள்ளது. பார்வையாளர்களை தவறாக வழி நடத்துகிறார் என சல்மான் கான் மீது கோட்டா நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சல்மான் கான் தரப்பில் விசாரணையின் போது ஆஜரான வழக்கறிஞர், “பான் மசாலா அல்லது குட்கா போன்றவற்றை விளம்பரப்படுத்தும் விதமாக சல்மான்கான் நடிக்கவில்லை. சில்வர் கோட்டிங் செய்யப்பட்ட ஏலக்காயை தான் அவர் விளம்பரப்படுத்தி நடித்துள்ளார். தவிர சல்மான் கான் அந்த பொருளை உற்பத்தி செய்பவராகவோ அல்லது அதை விற்பனை செய்பவராகவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது” என்று ஒரு புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.