ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் | ''முன்பு காட்டியதை விட ஷூட்டிங்கில் சிறிய உடை கொடுப்பார்கள்'' : மும்தாஜ் பகிர்ந்த வேதனை அனுபவங்கள் | தனுஷ் 55வது பட வெளியீடு எப்போது தெரியுமா? | 'புருஷன்' படத்தின் படப்பிடிப்பில் சுந்தர்.சி தீவிரம்! | துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! | மீண்டும் தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்கும் லிங்குசாமி! | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போன அஜித் படம்! | ரஜினி 173வது படத்தின் முக்கிய அப்டேட்! | 63 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'பெத்தி' டிரைலர் | இந்த வாரம், புதிய படங்கள் இல்லையா ? |

'டக்கர்' படத்திற்கு பிறகு கார்த்திக் ஜி கிரிஷ்,சித்தார்த் கூட்டணியில் 'ரவுடி அண்ட் கோ' என புதிய படம் உருவாகி வருகிறது.
தற்போது இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, "சித்தார்த் கிட்ட நிறைய விஷயங்கள் ரொம்ப பிடிக்கும். பலரும் அவர் முரண்டு பிடிப்பார் என கூறுவார்கள். ஆனால், அவர் அப்படிப்பட்டவர் இல்லை என பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ரொம்பவே நேர்மையானவர். படப்பிடிப்பிற்கு அவர் சரியான நேரத்தில் வர வேண்டும் என நாம் விரும்பினால், அவர் வந்து நிற்பார். அதே போல நாமும் சரியான நேரத்திற்கு இருக்கணும்னு எதிர்பார்ப்பார். இப்படி ஒரு கதாபாத்திரம் அவர் நடித்தது இல்லை என்பதால் நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்" என கூறினார்.




