மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

ஹிந்தி சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி ஆகிய இருவரும் சில ஆன்டுகளாக காதலித்து வந்தவர்கள், கடந்த 2023ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், சித்தார்த் மல்கோத்ரா ஹிந்தி படங்களில் நடித்து வரும் நிலையில், திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி. ஷங்கர் இயக்கிய 'கேம் சேஞ்சர்' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவலை ஏற்கனவே வெளியிட்ட அவர்கள் தற்போது தங்கள் மகளுக்கு பெயர் சூட்டி உள்ளார்கள். இணையப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எங்கள் பிரார்த்தனைகளில் இருந்து எங்கள் கரங்களுக்கு எங்கள் தெய்வீக ஆசீர்வாதம் எங்கள் இளவரசி 'சராயா மல்கோத்ரா' என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களது மகளுக்கு 'சராயா மல்கோத்ரா' என்று பெயர் சூட்டிருப்பது தெரியவந்துள்ளது.