ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'சிக்கந்தர்' ஹிந்திப் படம் படுதோல்வியைத் தழுவியது. அதற்குப் பின்னர் முருகதாஸ் அளித்த பேட்டி ஒன்றில், 'சிக்கந்தர்' படப்பிடிப்புக்கு இரவு நேரங்களில் மட்டுமே சல்மான் படப்பிடிப்புக்கு வந்தார். அதுதான் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறியிருந்தார்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் தொகுத்து வழங்கி வரும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமெண்ட் செய்திருந்தார் சல்மான் கான். நான் இரவு நேரங்களில் வந்ததுதான் படத் தோல்விக்குக் காரணம் என்றால், அந்த இயக்குனர் இயக்கிய தென்னிந்தியப் படத்தின் நாயகன் காலையிலேயே படப்பிடிப்புக்கு வந்துவிடுவாரே, அப்படம் தனது 'சிக்கந்தர்' படத்தை விடவும் பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றதா என்றார்.
கடந்த இரண்டு நாட்களாக இந்த கமெண்ட் சமூக வலைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது. 'சிக்கந்தர்' தோல்விக்குக் காரணத்தைச் சொன்ன முருகதாஸ் 'மதராஸி' தோல்விக்கும் காரணத்தைச் சொல்வாரா என சல்மான் ரசிகர்கள் கேட்கிறார்கள். பதிலுக்கு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் 'மதராஸி' வெற்றிப்படம் என்று கூறி வருகிறார்கள்.